29 April 2011

மொழி தெரியாதவர்களுக்கு மொழி பெயர்த்துக் கொடுக்கும் மூக்குக் கண்ணாடி

மக்களிடையே தொடர்புக்கு மிகவும் அடிப்படையானது மொழி. இன்று அறிவியல் வளர்ச்சியால் உலகமே சுருங்கிவிட்டது.

அதனால் பலமொழிகளை அறிந்து வைத்திருப்பது நமக்கு அவசியமாகிறது. குறைந்தபட்சமாக தாய்மொழி, தேசியமொழி, உலகப்பொதுமொழி ஆகியவற்றையாவது அறிந்திருக்க வேண்டும்.

சிலர் பொது இடங்களில் பலமொழிகளை பேசி அசர வைப்பார்கள். பலர் தாய்மொழியைத் தவிர மற்றமொழி தெரியாமல் விழி பிதுங்க நிற்பார்கள். படித்த சிலர்கூட பொது இடங்களில் இருக்கும் அறிவிப்புகள் வேறு மொழியில் இருந்தால் கண்டும் காணாமல் சென்று விடுவார்கள். படிக்கும் குழந்தைகளுக்கும் மற்ற மொழிப் பாடங்கள் சிரமமாக இருக்கும்.

இவர்களுக்கு உதவும் வகையில் மொழிபெயர்க்கும் கண்ணாடி வந்திருக்கிறது. இந்த மூக்குக்கண்ணாடியுடன் இணைந்து ஒரு டிரான்ஸ்லேட்டர்(மொழிபெயர்க்கும்) கருவி இருக்கும். இது ஒரு கமெராவும், மைக்ரோ போனும் இணைந்த கருவியாகும்.

இந்த கண்ணாடியை அணிந்து கொண்டு நீங்கள் வாசிக்கும் போது மைக்ரோபோன் வேலை செய்து அதை மெமரி (Memory) கருவிக்கு அனுப்பும். அங்கிருந்து அதற்கான மொழிபெயர்ப்பு வார்த்தை உங்களுக்குத் தெரியும் படியாக காட்டப்படும்.

இதனால் நீங்கள் எளிதில் அறிவிப்புகளையோ, பத்திரிகைகளையோ வாசித்து அறிந்து கொள்ள முடியும். இந்தக்கருவி ஜப்பான் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு சோதனை முறையில் வெற்றி கிடைத்துவிட்டது.

ஆனால் நாம் வாசிக்கும் வேகத்துக்கு மொழி பெயர்க்கும் வேகம் இல்லை. எனவே இதன் வேகத்தை அதிகரிக்கவும், வார்த்தைகளை மொழிபெயர்த்து உச்சரித்து சொல்லும் வகையில் மாற்றவும் ஆய்வுகள் நடந்து வருகிறது. படிக்கும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, மொழித்தடுமாற்றம் உடைய பலருக்கும் இந்தக் கண்ணாடி உபயோகப்படும் என்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

28 April 2011

வன்தட்டுகளை சுத்தம் செய்வதற்கு


விண்டோஸ் சிஸ்டம் இயக்கத்தில், கோப்புகளை நிர்வகிப்பதில் உலகளவில் பயன்படுத்தப்படும் புரோகிராம்களில் புகழ் பெற்றது சிகிளீனர்(CCleaner) ஆகும்.

அவ்வப்போது ஏற்படும் தற்காலிக கோப்புகள், குக்கீஸ், தேவையற்ற ரெஜிஸ்ட்ரி குறியீடுகள் போன்றவற்றை நீக்கி வன்தட்டுகளை சுத்தப்படுத்துவதில் சிறப்பாக இது இயங்குகிறது.

இதனைத் தயாரித்து வழங்கும் பிரிசாப்ட்(Pirisoft) நிறுவனம் அண்மையில் இதன் புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பினை(பதிப்பு 3.0.5) வெளியிட்டுள்ளது. புதிய பதிப்பில் மேலும் 20 வெவ்வேறு வகையான புரோகிராம்களுக்கு சப்போர்ட் வழங்கப்படுகிறது.

இவை கேம்ஸ் புரோகிராம் முதல் வாய்ஸ் கம்யூனிகேஷன் புரோகிராம் வரை அடங்கும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்துபவர்கள் தங்கள் பயன்பாடு குறித்து இந்த பிரவுசர் தயாரித்து வைக்கும் தகவல்களை நீக்கலாம்.

ஐ-ட்யூன்ஸ் குக்கிகள், பழைய விண்டோஸ் பயர்வால் விதிமுறைகள் ஆகியவற்றை புதிய பதிப்பு கவனித்துக் கொள்கிறது. ரெஜிஸ்ட்ரி கிளீனர் பகுதியில் பழைய பயன்படுத்தாத விண்டோஸ் புரோகிராம்களுக்கான குறியீட்டு வரிகளை நீக்க வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9, பயர்பொக்ஸ் 4, ஐ ட்யூன்ஸ், ஆப்பரா பிரவுசர், பயர்பொக்ஸ்/மொஸில்லா பாஸ்வேர்ட் பதிவுகள் ஆகியவை தற்போதைய பதிப்பின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன. கணணி சப்போர்ட் செய்திடும் அனைத்து புரோகிராம்களின் பட்டியல் காட்டப்படுகிறது.

இந்த புதிய சிகிளீனர் விண்டோஸ் எக்ஸ்பி(32 மற்றும் 64 பிட் புரோகிராம்) விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 2000 மற்றும் விண்டோஸ் 7 ஆகிய சிஸ்டங்களில் இயங்குகிறது. இவற்றின் சர்வர் ஓபரேட்டிங் சிஸ்டங்களிலும் செயல்படுகிறது.

24 April 2011

ஜிமெயிலில் டுவிட்டரை பயன்படுத்தலாம் பாருங்க...

டுவிட்டர் தளமானது நண்பர்களிடம் தகவல்களை பறிமாறிக் கொள்ள உதவும் தளம் ஆகும். சமூக இணையதளத்தில் அதிகமாக பயன்படுத்தபடும் தளத்தில் இந்த தளமும் ஒன்றாகும்.

சாதாரண மனிதனில் தொடங்கி மிகப்பெரிய நபர்கள் வரை டுவிட்டர் தளத்தில் கணக்கு வைத்திருப்பார்கள். இவர்கள் தங்களுடைய சுயவிவரங்களையும், பிடித்த செயல்களையும் அவ்வப்போது டுவிட்டர் தளத்தில் வெளியிடுவார்கள்.

செய்திதாள்களில் கூட வெளிவராத செய்திகள் இதுபோன்ற சமூக இணையதளங்களில் காண முடியும். இதுபோன்ற செய்திகளை நாம் டுவிட்டர் தளத்தில் நம்முடைய கணக்கில் நுழைந்த பின்புதான் காண முடியும்.

ஒரே நேரத்தில் பல தளங்களில் பணியாற்றும் போது நாம் தனியாக இந்த தளத்திற்கு சென்று இதுபோன்ற செய்திகளை காண முடியாது. டுவிட்டரில் பதிவிடும் செய்திகளை ஜிடால்கில் இருந்தவாறே காண முடியும் இதற்கு ஒரு தளத்தில் ஜிமெயில் கணக்கு மற்றும் டுவிட்டர் கணக்கினை சமர்பிக்க வேண்டும்.

இந்த தளத்தின் நுழைந்து முதலில் கொடுக்கப்பட்ட சுட்டியை கிளிக் செய்து கூகுள் கணக்கின் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு Allow என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்ததாக டுவிட்டர் கணக்கின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு Allow என்னும் பொத்தானை அழுத்தவும்.

அடுத்து ஜிடால்கினை ஓபன் செய்து அதில் புதியதாக வந்துள்ள நண்பர் அழைப்பினை ஒகே செய்யவும். அவ்வளவு தான் இனி டுவிட்டரில் பதியப்படும் உங்கள் கணக்கு தொடர்பான அனைத்து செய்திகளையும் உங்களால் ஜிடால்கில் இருந்தவாறே பெற முடியும்.

இந்த வசதியினை நீங்கள் ஜிமெயில் அரட்டையிலும், ஆர்குட் அரட்டையிலும் பெற முடியும். விரும்பினால் நிறுத்திக் கொள்ளவும் முடியும். இந்த வசதியின் மூலம் இனி தனியாக டுவிட்டர் கணக்கினை திறக்க வேண்டிய அவசியம் இருக்காது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More