28 June 2010

3ஜி இணைந்த நெட்புக் கம்ப்யூட்டர்

3ஜி இணைந்த நெட்புக் கம்ப்யூட்டர் மற்றும் ஆலிவ் பார் எவர் ஆன் என்ற இருவகை சிம்களை ஏற்றுக் கொள்ளக் கூடிய மொபைல் போனையும் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய ஆலிவ் டெலிகம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ஆலிவ் விஸ் (Olive Wiz) என்ற சோஷியல் நெட்வொர்க் மொபைல் போன் ஒன்றை
அறிமுகப்படுத்தியுள்ளது
.இதில் மூன்று (2 ஜி.எஸ்.எம். + ஒரு சி.டி.எம்.ஏ) சிம்களை இணைத்துப் பயன்படுத்தலாம். இதில் ஆப்பரா மினி பிரவுசர் தரப்பட்டுள்ளது. ஒரு கிளிக் மூலம் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களுகுச் செல்லலாம் பிரவுசிங் மேற்கொள்ளலாம்.

குவெர்ட்டி கீ போர்டு உள்ளது. எளிதாக இமெயில்களைக் கையாள இது உதவுகிறது. ஒரு மொபைல் போனில் காணப்படும் அனைத்து அடிப்படை வசதிகளுடன், 2 மெகா பிக்ஸெல் கேமரா, 4 ஜிபி வரை அதிகப்படுத்தக்கூடிய எஸ்.டி.கார்ட் ஸ்லாட்,2.2 அங்குல வண்ணத் திரை, இமெயில் பிரவுசிங், WAP/MMS/GPRS தொழில் நுட்ப வசதிகள், ஸ்டீரியோ ஹெட்செட், ஸ்பீக்கர் போன்,எப்.எம். ரேடியோ ஆகியவை உள்ளன

.

13 June 2010

ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை

பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று இணையதள பாதுகாப்பு நிறுவனமான சோஃபோஸ், எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமூக தளமான ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் நட்பு வட்டாரத்திற்கு ஸ்பேம் தகவல் ஒன்றை அனுப்பும் மோசடி நடைபெற்று வருவதாக அது எச்சரித்துள்ளது.

லைக் ஜக்கிங் என பெயரிடப்பட்டுள்ள இந்த மோசடியில் பல்லாயிரக்கணக்கான ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் இரையாகியுள்ளனர் என்று சோஃபோஸ் நிறுவனம் தனது வலைப்பதிவுகளில் தெரிவித்துள்ளது.

இந்த மனிதர் கடந்த 8 ஆண்டுகளாக தன்னைத் தானே படம் எடுத்துக் கொள்கிறார் என்ற தகவலுடன் ஒரு செய்தி ஏராளமான ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனுடன் உள்ள சுட்டியை கிளிக் செய்யவும் அது ஊக்குவிக்கிறது.

அவ்வாறு கிளிக் செய்யும் போது, ஒரு வெற்றுப்பக்கம் தோன்றி, மேலும் தொடர இங்கே கிளிக் செய்யவும் என்ற தகவல் இடம்பெற்றுள்ளது.
அதைக் கிளிக் செய்தால் மீண்டும் அதேபோன்றதொரு தகவல் வருகிறது. மேலும் இந்தத் தகவலை ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் அனைத்து நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கிறது. இதன் மூலம் இந்தத் தகவல் அனைவருக்கும் பரவி வருகிறது என்று சோஃபோஸ் எச்சரித்துள்ளது.

உங்கள் கம்ப்யூட்டரில் தானாகவே விளம்பரங்களை பதிவிறக்கம் செய்யும் மென்பொருள் ஒன்றை உங்களது கம்ப்யூட்டரில் பொருத்துவதற்கான ஒரு மோசடி ஃபேஸ்புக்கில் நடப்பதாக சோஃபோளூ; கடந்த வாரத்தில் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது

31 May 2010

பயர்பாக்ஸ் 4 வடிவமைப்பில் சுறுசுறுப்பு........


தொடர்ந்து பல மாதங்களாக, கூகுள் குரோம் பிரவுசர் தன் சந்தையை விரிவு படுத்திக் கொண்டிருக்கிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9ல் புதிய வசதிகளைக் கொண்டு வர மைக்ரோசாப்ட் முயற்சித்துக் கொண்டுள்ளது.எனவே மொஸில்லா தன் பயர்பாக்ஸ் தொகுப்பு 4 ஐ, எந்த விதத்திலாவது படு சூப்பராக அமைக்க வேண்டும் எனத் திட்டமிட்டு அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இதன் கட்டமைப்பை வடிவமைக்கும் குழுவின் தலைவர் மைக் பெல்ட்ஸ்நர் இது பற்றி அண்மையில் ஒரு பிரசன்டேஷன் அளித்துள்ளார்.பயர்பாக்ஸ் தொகுப்பு 4 மூன்று இலக்குகளை முதலில் நிறுத்தியுள்ளது. இந்த பிரவுசரின் இணைய தளங்களின் தேடல் வேகம் சூப்பர் பாஸ்ட் ஆக இருக்க வேண்டும். எச்.டி.எம்.எல். 5 மற்றும் பிற தொழில் நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும். இந்த பிரவுசரைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தங்கள் இணைய தேடலைத் தங்கள் விருப்பத்திற்கேற்ப அமைத்துக் கொள்ள கூடுதல் வசதிகள் தரப்பட வேண்டும்.அநேகமாக டேப்கள் அட்ரஸ் பாருக்கு மேலாக அமைக்கப்படலாம். ஹோம் பேஜ் பட்டனுக்குப் பதிலாக, ஹோம் டேப் தரப்படலாம்.

பயர்பாக்ஸ் 4 பிரவுசர் சோதனைத் தொகுப்பு வரும் ஜூன் மாத இறுதிக்குள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சரியாக வெளிவரும் நிலையில், வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் இறுதித் தொகுப்பு வெளியாகலாம்.மொஸில்லா மட்டுமின்றி, தங்கள் பிரவுசர்களைப் புதுப்பித்து புதியனவற்றைக் கொண்டு வர முயற்சிக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் பல சவால்கள் முன் உள்ளன. முதலாவதாக ஸ்பீட். இந்த பிரிவில் குரோம் மற்றவற்றை முந்திக் கொண்டு தற்போது இயங்குவதுடன், இன்னும் அதனை அதிகப்படுத்தி வருகிறது. எனவே மற்றவர்கள் இதற்கு இணையாகச் செயலாற்ற வேண்டும். அனைத்து பிரவுசர்களுக்கும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். திடீரென அதிரடி மாற்றங்களுடன் புதிய பிரவுசர்கள் வந்தால், அவை அனைத்தையும் ஏற்றுக் கொண்டு செயல்பட அவர்கள் தயங்கலாம். மூன்றாவதாக, இப்போது பிரவுசரில் மாற்றங்களைக் கொண்டு வந்தால், அவை பெர்சனல் கம்ப்யூட்டருக்கு மட்டுமின்றி, மொபைல் போன்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். இந்த பிரிவு வேறு வகையான தொழில் நுட்பத்தினையும் சூழ்நிலைகளையும் கொண்டிருப்பதால், நிறுவனங்கள் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. இணைய அப்ளிகேஷன்களில் தற்போது புதுமையான பல தொழில் நுட்பங்கள் வேகமாகப் புகுத்தப்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் உள்ளடக்கியதாகப் புதிய பிரவுசர்கள் உருவாக்கப்பட வேண்டும்


.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More