19 July 2010

3ஜி இணைந்த நெட்புக் கம்ப்யூட்டர்


3ஜி இணைந்த நெட்புக் கம்ப்யூட்டர் மற்றும் ஆலிவ் பார் எவர் ஆன் என்ற இருவகை சிம்களை ஏற்றுக் கொள்ளக் கூடிய மொபைல் போனையும் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய ஆலிவ் டெலிகம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ஆலிவ் விஸ் (Olive Wiz) என்ற சோஷியல் நெட்வொர்க் மொபைல் போன் ஒன்றை
அறிமுகப்படுத்தியுள்ளது
.இதில் மூன்று (2 ஜி.எஸ்.எம். + ஒரு சி.டி.எம்.ஏ) சிம்களை இணைத்துப் பயன்படுத்தலாம். இதில் ஆப்பரா மினி பிரவுசர் தரப்பட்டுள்ளது. ஒரு கிளிக் மூலம் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களுகுச் செல்லலாம் பிரவுசிங் மேற்கொள்ளலாம்.

குவெர்ட்டி கீ போர்டு உள்ளது. எளிதாக இமெயில்களைக் கையாள இது உதவுகிறது. ஒரு மொபைல் போனில் காணப்படும் அனைத்து அடிப்படை வசதிகளுடன், 2 மெகா பிக்ஸெல் கேமரா, 4 ஜிபி வரை அதிகப்படுத்தக்கூடிய எஸ்.டி.கார்ட் ஸ்லாட்,2.2 அங்குல வண்ணத் திரை, இமெயில் பிரவுசிங், WAP/MMS/GPRS தொழில் நுட்ப வசதிகள், ஸ்டீரியோ ஹெட்செட், ஸ்பீக்கர் போன்,எப்.எம். ரேடியோ ஆகியவை உள்ளன

.

பேஸ்புக்கிற்கு போட்டியாக வருகிறது 'கூகுள் மீ


சோசியல் நெட்வொர்க் இணையதளங்களில், ஆரம்பித்த சில நாட்களிலேயே அசுர வளர்ச்சி பெற்றுள்ள பேஸ்புக்கிற்கு போட்டியாக, கூகுள் நிறுவனம் 'கூகுள் மீ' என்ற பெயரில் புதி‌ய இணையதளத்தை துவக்க உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தி்த்த டிக் நிறுவனர் கெவின் ரோஸ், இந்த செய்தியை நம்ப முடியவில்லை எனினும், நம்பத்தகுந்த இடத்திலிருந்து இந்த தகவல் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொழில்நுட்ப இணையதளங்களான மாஷபிள் மற்றும் டெக்கிரஞ்ச் உள்ளிட்ட தளங்களும் இந்த தகவலை உறுதி செய்துள்ளன.

கூகுள் நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாகவே, விரைவில் 'கூகுள் மீ' இணையதளத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுகுறித்த ஆய்வுகள், தென் ஆப்ரிக்காவின் டப்ளின் நகரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்று வருவதாக டெக்கிரஞ்ச் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது

14 July 2010

மைக்ரோ சொஃப்ட் நிறுவனத்தின் புதிய வெளியீடு


மைக்ரோ சொஃப்ட்(microsoft) நிறுவனம் தனது புதிய உற்பத்தி தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. தனது விண்டோஸ் 7(windows) இயங்கு தளத்தை கொண்டு இயங்கும் tablet pc க்கள் இந்த வருடத்தில் வெளிவரும் என்று தெரிவித்துள்ளது.

இது ஸ்மார்ட்(smart) சாதன பாவனையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.இது தொடர்பான அறிவிப்பை தனது வியாபார பங்காளர்களுடன் இடம்பெற்ற மகாநாட்டில் வெளியிட்டிருந்தது. இங்கு Hp, Asus, Dell, Samsung, Toshiba, and Sony போன்ற நிறுவனங்கள் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Apple நிறுவனத்தின் ipad வெளியாகி 80 நாட்களுக்குள் 3 மில்லியன் விற்றுத்தீர்ந்த நிலையில் இந்த அறிவிப்பானது மிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More