கீழ் search, இணைய செய்திகள், இமெயில் பதிபவர் cybersimman குறியிடப்பட்டது:இணையம், இமெயில், கூகுல், தபால். கருத்துத்தெரிவிக்கவும்
ஆயிரம், இல்லை லட்சம் தான் சொல்லுங்கள் கூகுலுக்கு நிகர்கூகுல் தான்.
புதிய சேவையை அறிமுகம் செய்வதிலும் சரி சின்ன சின்னதாக புதுமைசெய்வதிலும் சரி கூகுல் தனக்கென தனி பாணியையும் சுறுசுறுப்பையும்கொண்டுள்ளது.
இதுவரை எத்தனையோ முறை இணையவாசிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளகூகுல் இப்போது மீண்டும் ஒருமுறை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.உலகிலேயேமிகவும் பிரபலமான இமெயில் சேவை அளித்து வரும் கூகுல் அமெரிக்கர்கள்இலவசமாக வாழ்த்து அட்டையை தபாலில் அனுப்பி வைப்பதற்கான் சேவையைஅறிமுகம் செய்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அமெரிக்கா முழுவதும் இப்போதுவிடுமுரை கால மனோநிலையில் உள்ளது.வாழ்த்துக்கள் பரிமாரப்பட்டு வரும்இந்த காலத்தில் ஜிமெயில் உறுப்பினர்கள் தங்கள் நண்பர்களில் யாரவதுஒருவருக்கு தபால் மூலம் வாழ்த்து அட்டையை அனுப்பி வைக்கலாம் எனகூகுல் அழைப்பு விடுத்துள்ளது.பெயரையும் முகவரியையும் சமர்பித்தால்இலவசமாக இந்த அட்டையை கூகுல் அனுப்பி வைக்கும்.
இமெயில் சிறந்தது என்றாலும் தபாலில் வாழ்த்து அட்டையை பெறும்அனுபவத்திற்கு ஈடு இல்லை என்று குறிப்பிட்டுள்ள கூகுல் அந்த மகிழ்ச்சியைஅளிப்பதற்காக இந்த வசதியை உருவாக்கியதாக தெரிவித்துள்ளது.அதிலும்நீண்ட நாட்களாக தொடர்பு கொள்ளாதவர்களிடம் இருந்து வாழத்து வருவதுவிஷேசமானது என கூகுல் தெரிவிக்கிறது.
வர்த்தக் நிறுவனமான கூகுல் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் லாபநோக்கம் இல்லாமல் இல்லை. இந்த அட்டையிலும் குகுல் தனது சேவையைவிளம்பரம் செய்து வருகிறது.ஆனாலும் கூட இந்த சேவை புதுமையானதுஎன்பதில் சந்தேகமில்லை.எல்லோரும் மெல்ல தபால் சேவையை மறந்து வரும்நிலையில் கூகுல் தபால் மூலம் வாழ்த்து அனுப்ப வைத்து நட்பைபுதுப்பித்துக்கொள்ள சந்தர்ப்பம் அளித்துள்ளது.
தீடிரென் வாழ்த்து அட்டை வரும் போது மகிழ்ச்சி ஏற்படுபவதோடு இமெயில்க்குமுந்தைய காலத்திற்கும் திரும்பிச்சென்று வரலாம் அல்லவா?
அதோடு இந்த சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதாகவைத்துக்கொள்வோம் .அப்போது கிராமத்தில் இருக்கும் தாத்தாவிற்கோ அல்லதுசித்தப்பாவிற்கோ பொங்கல் வாழ்த்து அட்டையை தபாலில் அனுப்பி வைத்தால்அவர்கள் எப்படி மகிழ்வார்கள் என எண்ணிப்பாருங்கள்.
விளம்பரத்திற்காக என்றாலும் உண்மையிலேயே பயனுள்ள சேவையைஅறிமுகம் செய்வது தான் கூகுலின் தனிச்சிறப்பு.
தை திங்களுக்கு கூகுல் இங்கேயும் இந்த சேவையை அளிக்க வேண்டும் என்றுகோரிக்கை வைப்போம்.