14 March 2011

உங்கள் yahoo கணக்கை Gmail ல் தொடர.....

நீங்கள் Yahoo மற்றும் Gmail கணக்கு வைத்திருந்து இனிமேல் Gmail லிலேயே தொடரலாம் என்ற முடிவிற்கு வந்தால், உங்கள் Yahoo கணக்கிலுள்ள தொடர்புகள் மற்றும் மின்னஞ்சல்களை ஜிமெயில் கணக்கின் மூலம் பயன்படுத்தலாம்.

இதற்கு முதலில் உங்கள் பயனர் பெயரும், கடவுச் சொல்லும் கொடுத்து Gmail கணக்கில் நுழையுங்கள்.

ஜிமெயில் திரையில் வலது மேல் மூலையிலுள்ள Settings லிங்கை கிளிக் செய்யுங்கள். அதில் Accounts and Import என்ற Tapeஐ கிளிக் செய்து, Import mail and contacts பட்டனை அழுத்துங்கள்.

இனி வரும் திரையில் உங்கள் Yahoo மெயில் கணக்கை கொடுத்து Continue பட்டனை கிளிக் செய்யுங்கள்.

தொடரும் அடுத்த திரையில் உங்கள் yahoo கடவுச் சொல்லை கொடுத்து Continue பட்டனை கிளிக் செய்யுங்கள்.

அடுத்த திரையில் import செய்ய வேண்டியவற்றை தேர்வு செய்யவும். ஒருமுறை சரி பார்த்த பின்னர் Start Import பட்டனை கிளிக் செய்யவும். அடுத்த இறுதி திரையில் OK பட்டனை கிளிக் செய்யவும்.

அவ்வளவு தான் நாம் import செய்யும் மெயில்களின் அளவைப் பொறுத்து impoசெய்யும் நேரம் மாறுபடும்

11 March 2011

Chip பைல்களின் கடவுச்சொல்லை உடைக்க

அதிகமாக உள்ள கோப்புகளின் அளவை சுருக்க பயன்படுத்தப்படும் பார்மெட்டுகளில் ஜிப் பார்மெட்டும் ஒன்றாகும். இதற்கு நாம் கடவுச்சொல் கொடுத்து உருவாக்க முடியும்.

ஒரு சில நேரங்களில் இவ்வாறு உருவாக்கும் கோப்புகளின் கடவுச்சொல்லை நாம் மறந்து விடுவோம். அப்போது அந்த குறிப்பிட்ட கோப்புகள் ஜிப்பைலாக மட்டுமே இருக்கும். ஒரு சில கணணி பயனாளர்கள் வைரஸ் தாக்காமல் இருப்பதற்காக டாக்குமெண்ட்களை ஜிப் பைலாக மட்டுமே வைத்திருப்போம்.

அதனுடைய ஒரிஜினல் கோப்புகள் யாவும் நம்மிடம் இருக்காது. அவை அனைத்தும் ஜிப் பைல்களாக மட்டுமே இருக்கும். அது போன்ற சூழ்நிலையில் அந்த கோப்புகளின் கடவுச்சொல்லை நீக்கினால் மட்டுமே ஒரிஜினல் கோப்புகளை நம்மால் பயன்படுத்த முடியும்.

இவ்வாறு ஜிப் பைல்களின் கடவுச்சொல்லை உடைக்க மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து தரவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும்.

பின் இந்த அப்ளிகேஷனை ஓபன் செய்யவும். அதில் கடவுச்சொல் இட்டு பூட்டப்பட்ட ஜிப் பைலை தேர்வு செய்து கொள்ளவும். அடுத்து எங்கு சேமிக்க வேண்டுமோ அந்த இடத்தை தேர்வு செய்து கொள்ளவும்.

Characters என்ற பாக்சில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். MinLength, MaxLength என்பதில் இலக்கங்களை குறிப்பிட்டு கொள்ளவும். பின் Start பொத்தானை அழுத்தவும்.

நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் கோப்பானது கடவுச்சொல் நீக்கப்பட்டு சேமிக்கப்படும். ஆனால் கடவுச்சொல்லை நீக்க அதிக நேரம் ஆகும். உங்களுடைய கடவுச்சொலை பொருத்து நேரம் வேறுபடும்.

Internet ல் அனைத்திற்கும் தனித்தனி பட்டன்கள்

இண்டர்நெட் பட்டன்களால் ஆகியிருந்தால் எப்படி இருக்கும் என்று எப்போதாவது நீங்கள் நினைத்து பார்த்ததுண்டா?

அதாவது எல்லாவற்றுக்கும் ஒரு பட்டன். இமெயிலா அதற்கு ஒரு பட்டன். பேஸ்புக்கா அதற்கு ஒரு பட்டன். டிவிட்டரா அதற்கும் ஒரு பட்டன். எந்த தளத்திற்கு செல்வதாக இருந்தாலும் பிரவுசரை அழைத்து அதில் இணையதள முகவரியை டைப் செய்ய வேண்டியதில்லை. அதற்கான பட்டனை கிளிக் செய்தால் போதும் நேராக அந்த தளத்திற்கு சென்று விடலாம்.

இண்டர்நெட்டில் நாம் அணுகக்கூடிய தளங்கள் மற்றும் சேவைக்கான குறுக்கு வழியாக இந்த பட்டன்கள் அமையக் கூடும். இணையத்தில் உலா வர பிரவுசர் இருக்கிறது. அடிக்கடி செல்லும் தளங்களுக்கு உடனடியாக செல்ல புக்மார்கிங் வசதியும் உள்ளது.

ஒரு சில பிரவுசர்களில் நாம் தின‌ந்தோறும் பார்வையிடும் தளங்கள் பிரவுசரை இயக்கியதுமே தோன்றி விடும். அவ்வாறு இருக்கும் போது ஏன் இந்த பட்டன்கள் என்று நினைக்கக் கூடும். இண்டர்நெட் அன்றாட வாழ்க்கையில் இரண்டற கலந்து வரும் நிலையில் பெரியவர்களையும் அதில் சங்கமிக்க கைகொடுப்பது தானே சரியாக இருக்கும்.

ஆனால் எத்தனை பேருக்கு இதற்கான நேரமும் பொறுமையும் இருக்கும் என்று தெரியவில்லை. இந்த இடத்தில் தான் இண்டர்நெட்டுக்கான பட்டன்கள் வருகின்றன. இண்டர்நெட்டில் அதிகம் பரிட்சயம் இல்லாதவர்கள் இணையதளங்களை பயன்படுத்த முற்படும் போது தட்டுத்தடுமாறும் நிலை ஏற்படலாம்.

அப்போதெல்லாம் அருகே இருப்பவரிடம் உதவி கோரலாம் அல்லது தொலைபேசியில் அழைத்து சந்தேகத்தை தீர்த்து கொள்ளலாம். இந்த சங்கடம் கூட இல்லாமல் இணையதளங்களை பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளவை தான் இண்டர்நெட் பட்டன்கள்.

உதாரண‌த்திற்கு இமெயில் சேவையை பயன்படுத்த வேண்டும் என்றால் இமெயில் என்னும் பட்டனை கிளிக் செய்தால் போது இமெயில் பக்கத்திற்கு அழைத்து சென்றுவிடும். அதே போல பேஸ்புக்கிற்கு போக வேண்டும் என்றால் பேஸ்புக் பட்ட‌னை கிளிக் செய்தால் போதும்.

இப்படி பல்வேறு இணையதளங்களுக்கான பட்டன்களை உருவாக்கி கொள்வதற்கான சேவையை இண்டர்நெட் பட்டன்ஸ் டாட் ஆர்ஜி தளம் வழங்குகிற‌து. இமெயில், பேஸ்புக், டிவிட்டர், யூடியூப், கூகுள் போன்ற இணையதளங்களுக்கான பட்டன்களை இந்த தளத்தில் உருவாக்கி கொள்ளலாம். இந்த‌ தளங்கள் தான் என்றில்லை. எந்த த‌ளத்திற்கும் அழைத்து செல்லக்கூடிய பட்டன்களை சுலபமாக உருவாக்கி கொள்ளலாம்.

பட்டன்களை தேர்வு செய்து அதில் இணையதளங்களுக்கான முகவரியை டைப் செய்தால் பளபளக்கும் வண்ணங்களில் அழகிய பட்டன்கள் தயாராகி விடும். அந்த பட்டன்களுக்கான இணைய முகவரியை சேமித்து கொண்டால் எந்த‌ கணணியிலும் சுலபமாக பயன்படுத்தலாம்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More