18 April 2010

ஸ்லிப்ஸ்ட்ரீமிங் (Slipstreaming) என்றால் என்ன??

சிலர் இப்படி அலுத்துக் கொள்வார்கள் – போன வாரம் இரவில் விண்டோஸ் சிஸ்டத்தை ரீ இன்ஸ்டால் செய்தேன். போதும் போதும் என்றாகிவிட்டது என்று சொல்லிவிட்டு, அவரே ஸ்லிப் ஸ்ட்ரீமிங் இருந்தால் கொஞ்சம் ஈஸியாக இருந்திருக்கும். சீக்கிரம் படுக்கைக்குப் போயிருக்கலாம் என்பார்.

விண்டோஸ் மிக ஈஸியாக இன்ஸ்டால் ஆகிவிடும். ஆனால் அதன் பின்னர், சர்வீஸ் பேக், லேட்டஸ்ட்டாக வந்த ஹாட் பிக்ஸ், அண்மையில் வந்த டிரைவர் தொகுப்புகள். என கணக்கிலடங்காத பின்னூட்டுகளை சிரமப்பட்டுத் தேடி இன்ஸ்டால் செய்திட வேண்டி இருக்கும். இல்லையேல் உங்கள் புரோகிராம்கள் இயங்காது. விண்டோஸ் முன்பு போலக் காட்சி அளிக்காது.

ஸ்லிப் ஸ்ட்ரீமிங் என்பது இந்த அலைச்சலுக்கும் தேடலுக்கும் ஒரு முடிவு கட்டுகிறது. ஸ்லிப் ஸ்ட்ரீமிங் என்பது ஒரு பூட்டபிள் சிடியில், நமக்குத் தேவையான லேட்டஸ்ட் டிரைவர் தொகுப்புகள், முழுமையான ஒரிஜினல் இன்ஸ்டலேஷன் பைல்கள், அப்போதைய சர்வீஸ் பேக் என அனைத்தையும் பதிந்து வைக்கும் செயல்பாடாகும். இந்த சிடியை வைத்துக் கொண்டால், விண்டோஸ் சிஸ்டம் தொகுப்பை ரீ இண்ஸ்டால் செய்வது முதல் அனைத்து வேலைகளையும் தானே மேற்கொண்டு விடும். இதனை எப்படி தயாரிப்பது?

இதற்கு முதலில் நமக்குத் தேவை விண்டோஸ் ஒரிஜினல் சிடி. இதனை முதலில் உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் சி (C:/XP) டிரைவில் காப்பி செய்திடவும். உங்களுடைய சிஸ்டம் டிஸ்க்கில் லேட்டஸ்ட் சர்வீஸ் காப்பி இருந்தால் நல்லது. இல்லையேல் மைக்ரோசாப்ட் தளம் சென்று அதனையும் காப்பி செய்து அந்த டிரைவில் தனியான போல்டரில்பேஸ்ட் செய்திடவும். மைக்ரோசாப்ட் தளத்தில் என்ன என்ன ஹாட் பிக்ஸ் பைல்கள் கிடைக்கின்றனவோ, அவை அனைத்தையும் காப்பி செய்து பேஸ்ட் செய்திடவும்

05 April 2010

முடங்கிப் போகும் கம்ப்யூட்டர்களுக்கு வைத்தியர் ஏவிஜி ரெஸ்க்யூ

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் பலரும், கம்ப்யூட்டர் கிராஷ் ஆனவுடன் தான், அடடா எதிர்பார்க்க வில்லையே இப்படி ஆகும் என்று எண்ணுகிறார்கள்.

இது போன்ற எமர்ஜென்சி நேரத்தில் பயன்பட பூட் சிடி தயாரித்து வைக்கும்படி கம்ப்யூட்டர் மலரில் கூட எழுதி இருந்தார்களே என்று அங்கலாய்க்கிறார்கள். நண்பர்களுக்கு போன் போட்டு கேட்கிறார்கள். ஒன்றும் முடியாத நிலையில் ஏதோதோ செய்து இறுதியில் ரீ பார்மட் அல்லது விண்டோஸ் ரீ இன்ஸ்டலேஷன் அளவிற்குப் போகிறார்கள்.

கம்ப்யூட்டர் ஒரு டிஜிட்டல் இயந்திரம். எந்த நேரமும் அது முடங்கிப் போகும் என்பதே உண்மை. சரி, ஊதுகிற சங்கை ஊதி வைப்போம் என்ற கதையாக இதோ இன்னும் ஒரு காப்பாற்றும் சிடி தயார் செய்திடும் தகவலை இங்கு தருகிறேன்.


இதன் பெயர் ஏவிஜி ரெஸ்க்யூ சிடி. ஆம், நமக்கெல்லாம் இலவசமாக ஆண்ட்டி வைரஸ் தரும் ஏவிஜி நிறுவனமே இதனையும் தருகிறது. இதுவும் இலவசமே.

இந்த ரெஸ்க்யூ சிடி வைரஸ் பாதிப்பினால் முடங்கிப் போகும் கம்ப்யூட்டர்களுக்கு ஒரு சிறந்த டாக்டராக இயங்குகிறது. அது மட்டுமின்றி சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்கள் மற்றும் ஐ.டி. நிர்வாகிகளுக்கும் உதவுகிறது. இதன் மூலம் சிஸ்டம் நிர்வாகம் செய்திடலாம், வைரஸ் மற்றும் ஸ்பைவேர்களால் பாதித்த கம்ப்யூட்டர்களை மீட்கலாம். எம்.எஸ். விண்டோஸ் மட்டுமின்றி, லினக்ஸ் சிஸ்டங்களையும் மீட்கலாம். யு.எஸ்.பி. ஸ்டிக் அல்லது சிடி வழியாக கிளீன் பூட் ஒன்றை மேற்கொள்ளலாம்.

இந்த ரெஸ்க்யூ சிடி என்பது லினக்ஸ் மூலம் வழங்கப்படும் இலவச போர்ட்டபிள் ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் தொகுப்பாகும். உங்களுடைய சிஸ்டம் பொதுவான வழிகளில் பூட் ஆகாத போது, இந்த சிடியைக் கொண்டு பூட் செய்திடலாம். அத்துடன் வைரஸ் பாதித்த கம்ப்யூட்டரைக் குணப்படுத்தி, வைரஸ்களை நீக்கும். இந்த வசதிகளைத் தருவதோடு கீழ்க்காணும் கூடுதல் செயல்பாடுகளையும் இது தருகிறது.
இரண்டு பேனல்களில் பைல் மேனேஜர் வசதி,எளிய விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி எடிட்டர் ஹார்ட் டிரைவ் ரெகவரி டெஸ்ட் டிஸ்க் ஆகச் செயல்பாடு நெட்வொர்க் (சர்வர், டொமைன், ஐபி முகவரி போன்றவை)வசதிகளைக் கண்டறியும் வசதி,

இதனைப் பயன்படுத்த 512 எம்பி ராம் மெமரி, இன்டல் பெண்டியம் 300 எம்.எச்.இஸட் ப்ராசசர் இருந்தால் போதுமானது. விண்டோஸ் 2000க்குப் பின் வந்த அனைத்து விண்டோஸ் இயக்கங்கலிலும் செயல்படும்.

DOWNLOAD செய்ய

04 April 2010

உடலை ஆரோ‌க்‌கியமாக வை‌க்க ஆ‌ப்‌‌பி‌ள்

தினமு‌ம் ஒரு ஆ‌ப்‌பி‌ள் சா‌ப்‌பி‌ட்டா‌ல் மரு‌த்துவ‌ரிட‌ம் செ‌ல்ல வே‌ண்டிய‌தி‌ல்லை எ‌ன்ற பழமொ‌ழி எ‌வ்வளவு‌க்கு எ‌வ்வளவு உ‌ண்மை எ‌ன்பதை தொட‌ர்‌ந்து நடைபெறு‌ம் ஆ‌ய்வுக‌ள் தெ‌ரி‌வி‌‌க்‌கி‌ன்றன.

ஆ‌ப்‌பிளு‌க்கு ப‌ல்வேறு அ‌ரிய குண‌‌ங்க‌ள் இரு‌ப்பது ப‌ல்வேறு ஆ‌ய்வு‌கள் மூல‌ம் ‌நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. மது போதை அடிமைகளை மீட்கவும் கூட ஆ‌ப்‌பி‌ள் உதவு‌கிறதா‌ம்.

போதை‌ப் பழ‌க்க‌த்‌தி‌ல் இரு‌ந்து ‌விடுப‌ட்டு, நமது உடல் ஆரோக்கியம் மேம்படவும் நம் உண்ணும் உணவிலுள்ள நச்சுகளை நீக்கவும், ரத்தத்தில் கலந்துள்ள நுண்கிருமிகளை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்யவும் பழங்களை உண்ணுதல் நல்லது.

இ‌ந்த பழ‌ங்க‌ள் எ‌ன்று கு‌றி‌ப்‌பி‌ட்ட‌தி‌ல் முதலிடத்தை பிடிப்பவை ஆப்பிள் பழமே. பைரஸ் மேலஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட போமேசியே குடும்பத்தைச் சார்ந்த ஆப்பிள் மரங்கள் குளிர்ச்சியான பிரதேசங்களில் ஏராளமாக விளைகின்றன.

கருஞ்சிவப்பு நிறத்தோலை உடைய ஆப்பிள் பழங்களே உண்ணத் தகுந்த பழங் களாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

01 April 2010

டயானா மரணம் : அல்பா சுரங்கத்தில் நடந்தது விபத்தல்ல கொலை!




இங்கிலாந்து இளவரசி டயானா கார் விபத்தில் இறக்கவில்லை; அவர் கொலை செய்யப்பட்டார் என்ற புதிய தகவல் கிளம்பியுள்ளது. அவர் இறந்து 13 ஆண்டுகள் கழிந்த நிலையில் இந்தத் தகவல் தற்போது கசிந்திருக்கிறது.

ஆரம்ப காலத்தில் இப்படி ஒரு பேச்சு அடிபட்டது எனினும், அது ஊர்ஜிதமாகமலே மறைந்து போனது. தற்போது மீண்டும் அது தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளன.

இளவரசி டயானா தனது காதலர் டோனி அல்பயத்துடன் பாரீஸ் நகரில் சுரங்க பாதையில் காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். விபத்தில் இருவரும் உயிரிழந்தனர்.

கடந்த 1997ஆம் ஆண்டு இந்த விபத்து நடந்தது. டயானா இறந்து 13 ஆண்டுகள் ஆகியும் அவரது மரணம் குறித்த சர்ச்சை இன்னமும் ஓயவில்லை. அவ்வப்போது புதுப்புதுத் தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.

தற்போது, இளவரசி டயானா கார் விபத்தில் இறக்கவில்லை அவர் கொலை செய்யப்பட்டார் என்ற புதிய தகவல் கிளம்பியுள்ளது. இதை இங்கிலாந்தின் முன்னணி வக்கீல் மைக்கேல் மேன்ஸ் பீல்ட் தெரிவித்துள்ளார்.

டயானா- டோனி அல்பயத் ஆகியோருக்கு இடையே இருந்த உறவை முறிப்பதற்காக இந்தக் கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. அல்மா சுரங்கப் பாதையில் நிகழ்ந்த கார் விபத்து முன் கூட்டியே திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட கொலை சதி என்றும் அவர் கூறியுள்ளார்.

இவர்கள் இருவரையும் கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு செய்ததாக தெரியவில்லை. ஆனால் மிகப்பெரிய விபத்தின் மூலம் அவர்கள் இருவரையும் பிரிக்க சதி செய்யப்பட்டது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்றும் வக்கீல் மைக்கேல் தெரிவித்துள்ளார்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More