28 June 2010

3ஜி இணைந்த நெட்புக் கம்ப்யூட்டர்

3ஜி இணைந்த நெட்புக் கம்ப்யூட்டர் மற்றும் ஆலிவ் பார் எவர் ஆன் என்ற இருவகை சிம்களை ஏற்றுக் கொள்ளக் கூடிய மொபைல் போனையும் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய ஆலிவ் டெலிகம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ஆலிவ் விஸ் (Olive Wiz) என்ற சோஷியல் நெட்வொர்க் மொபைல் போன் ஒன்றை
அறிமுகப்படுத்தியுள்ளது
.இதில் மூன்று (2 ஜி.எஸ்.எம். + ஒரு சி.டி.எம்.ஏ) சிம்களை இணைத்துப் பயன்படுத்தலாம். இதில் ஆப்பரா மினி பிரவுசர் தரப்பட்டுள்ளது. ஒரு கிளிக் மூலம் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களுகுச் செல்லலாம் பிரவுசிங் மேற்கொள்ளலாம்.

குவெர்ட்டி கீ போர்டு உள்ளது. எளிதாக இமெயில்களைக் கையாள இது உதவுகிறது. ஒரு மொபைல் போனில் காணப்படும் அனைத்து அடிப்படை வசதிகளுடன், 2 மெகா பிக்ஸெல் கேமரா, 4 ஜிபி வரை அதிகப்படுத்தக்கூடிய எஸ்.டி.கார்ட் ஸ்லாட்,2.2 அங்குல வண்ணத் திரை, இமெயில் பிரவுசிங், WAP/MMS/GPRS தொழில் நுட்ப வசதிகள், ஸ்டீரியோ ஹெட்செட், ஸ்பீக்கர் போன்,எப்.எம். ரேடியோ ஆகியவை உள்ளன

.

13 June 2010

ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை

பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று இணையதள பாதுகாப்பு நிறுவனமான சோஃபோஸ், எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமூக தளமான ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் நட்பு வட்டாரத்திற்கு ஸ்பேம் தகவல் ஒன்றை அனுப்பும் மோசடி நடைபெற்று வருவதாக அது எச்சரித்துள்ளது.

லைக் ஜக்கிங் என பெயரிடப்பட்டுள்ள இந்த மோசடியில் பல்லாயிரக்கணக்கான ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் இரையாகியுள்ளனர் என்று சோஃபோஸ் நிறுவனம் தனது வலைப்பதிவுகளில் தெரிவித்துள்ளது.

இந்த மனிதர் கடந்த 8 ஆண்டுகளாக தன்னைத் தானே படம் எடுத்துக் கொள்கிறார் என்ற தகவலுடன் ஒரு செய்தி ஏராளமான ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனுடன் உள்ள சுட்டியை கிளிக் செய்யவும் அது ஊக்குவிக்கிறது.

அவ்வாறு கிளிக் செய்யும் போது, ஒரு வெற்றுப்பக்கம் தோன்றி, மேலும் தொடர இங்கே கிளிக் செய்யவும் என்ற தகவல் இடம்பெற்றுள்ளது.
அதைக் கிளிக் செய்தால் மீண்டும் அதேபோன்றதொரு தகவல் வருகிறது. மேலும் இந்தத் தகவலை ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் அனைத்து நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கிறது. இதன் மூலம் இந்தத் தகவல் அனைவருக்கும் பரவி வருகிறது என்று சோஃபோஸ் எச்சரித்துள்ளது.

உங்கள் கம்ப்யூட்டரில் தானாகவே விளம்பரங்களை பதிவிறக்கம் செய்யும் மென்பொருள் ஒன்றை உங்களது கம்ப்யூட்டரில் பொருத்துவதற்கான ஒரு மோசடி ஃபேஸ்புக்கில் நடப்பதாக சோஃபோளூ; கடந்த வாரத்தில் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More