14 February 2010

கூகுள் லேப்ஸ் புதிய வசதிகள்

கூகுள் சர்ச் தேடல் பகுதிகளில் ஏதேனும் புதுமையான அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, வசதிகள் தரப்பட்டால், உடனே அதனை அறிந்து கொண்டு பயன்படுத்துகிறோம். கூகுள் தன் பிரிவுகள் அனைத்திலும் அதே போல புதிய அம்சங்களை அறிமுகப் படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. கூகுள் லேப்ஸ் பிரிவில் அறிமுகப்படுத் தியுள்ள சில அம்சங்களை இங்கு காண்போம்.

ஜிமெயிலில் செட்டிங்ஸ் (Settings) பிரிவில் லேப்ஸ் (Labs) என்பதில் கிளிக் செய்தால் இவற்றைப் பார்க்கலாம்.Google Search ஜிமெயிலில் நீங்கள் இருக்கையில், ஏதேனும் ஒன்றை கூகுள் சர்ச் இஞ்சினில் தேட வேண்டும் என்றால், உடனே வெளியேறி, அல்லது அடுத்த டேப்பில் கூகுள் சர்ச் தளத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. கூகுள் மெயிலில் இருந்தவாறே தேட வசதி தரப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி வழக்கமான தேடல் இஞ்சினில் உள்ளது போல டிக்ஷனரி விளக்கம்,ஸ்பெல் செக், கால்குலேட்டர், சீதோஷ்ண நிலை அறிதல், செய்திகள் என அனைத்து வசதிகளும் தரப்பட்டுள்ளன.

Undo Send

இந்த வசதி மூலம், Send பட்டனில் கிளிக் செய்து அனுப்பிய மெயிலை சில நொடிகளில் திரும்பப் பெறலாம்.

Snake


கூகுள் தளத்தில் இருக்கையில்,சிறிய பெர்சனல் பிரேக் எடுக்க வேண்டும் என்றால், விளையாட்டு ஒன்றை விளையாடலாம். Old Snakey என்னும் விளையாட்டினை முதலில் இயக்கிக் கொள்ளுங்கள். பின் ஜிமெயில் செட்டிங்ஸ் சென்று ஷார்ட் கட் கீ இயக்கத்திற்கு உயிர் (Enable) கொடுங்கள். அதன் பின் ஷார்ட் கட் கீயாக - கீயை அழுத்தினால் பிரபலமான ஸ்நேக் விளையாட்டு கிடைக்கும்.

Attachment Detector

அட்டாச்மென்ட் இணைப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டுவிட்டு, பின் அதனை இணைக்காமலேயே மெயிலை நாம் பல முறை அனுப்பி விடுகிறோம். பின்னர் தவறை உணர்ந்து மீண்டும் ஒரு முறை அந்த மெயிலை அட்டாச்மெண்ட் பைலுடன் அனுப்புகிறோம். இந்த தவறைக் கண்டறியும் வசதியாக, அட்டாச்மென்ட் டிடெக்டர் (Attachment Detector) உள்ளது. இதனை இயக்கி விட்டால், அது நாம் தயாரிக்கும் இமெயிலை ஸ்கேன் செய்கிறது. அதில் அட்டாச் செய்வதாக செய்தி இருந்தால், பைல் அட்டாச் செய்யப்படுகிறதா என்று கண்காணித்து, இல்லை எனில் நம்மை உஷார்படுத்துகிறது.

Hide Unread Counts

நமக்கு வந்த பல மெயில்களை நாம் வெகுநாட்கள் திறக்காமல் வைத்திருப்போம். இது தலைப்பில் இத்தனை மெயில்கள் படிக்கப்படாமல் உள்ளன என்று காட்டப்பட்டு நம் மானத்தினை வாங்கும். இந்த செய்தி வராமல் இருக்க இந்த டூல் உதவுகிறது.

Vacation Time

வெளியூர் செல்கிறீர்களா? அப்படியானால் உங்கள் இன்பாக்ஸில் வந்து சேரும் மெயில்களுக்கு யார் பதில் சொல்வது. இங்கு தான் Vacation Time என்ற வசதி பயன்தருகிறது. இதனை இயக்கி எந்த நாள் முதல் எந்த நாள் வரை என தேதிகளை வரையறை செய்தால், மெயில் வந்தவுடன், அதனை அனுப்பியவருக்கு, நீங்கள் விடுமுறையில் உள்ளதாகவும், குறிப்பிட்ட இந்த நாளில் வருவீர்கள் என்றும் செய்தி மின்னஞ்சலாகத் தானாகச் செல்லும்.

You Tube Preview

உங்களுக்கு வந்த மின்னஞ்சலில், அதனை அனுப்பியவர் யு ட்யூப் தளத்தில் உள்ள வீடியோ ஒன்றுக்கு லிங்க் அனுப்பி இருந்தால், அது என்ன என்று அறியாமல், புதிய டேப்பில் அதனை இயக்க வேண்டியதில்லை. இந்த வசதி மூலம், மெயிலிலேயே அந்த வீடியோவின் பிரிவியூ ஒன்றைக் காணலாம்.

Insert இமேஜ்

இந்த வசதி மூலம் இமேஜ் ஒன்றை இமெயிலில் இணைக்கலாம். அப்படியே அனுப்பலாம்.


02 February 2010

விண்டோஸ் 7-ல் ஏற்படும் 21 பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு

மைக்ரோசாப்ட்-ன் புதிய விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டம்

வெளியாகி அனைத்து நாடுகளிலும் அதிகஅளவு கால் பத்தித்த
டாப் ஆப்ரேட்டிங் சிஸ்டம் என்ற பெயரை பெற்றுள்ளது.இதற்கு
முக்கியமான காரணம் விண்டோஸ் 7-ன் 32 bit மற்றும்
64 bit என்ற இரண்டு பிரிவுகள் குறைவான் கான்பிக்ரேசன்
உள்ளவர்களுக்கு 32 bit, மேம்படுத்தப்பட்ட
கான்பிக்ரேசன்
உள்ளவர்களுக்கு 64 bit வெர்சன் இரண்டுமே ஹிட் தான்.
அதுமட்டுமல்ல செக்குயூரிட்டியில் அதிக அளவு பாதுகாப்புடன்
வெளிவந்திருக்கிறது.

விண்டோஸ் 7 குயிக் பிக்ஸ்" src="http://winmani.files.wordpress.com/2010/02/7qickfix.jpg?w=455&h=455" alt="" style="margin: 0px auto; display: block;" width="455" height="455">

ஹேக்கர்களுக்கு ஒரு சவாலாகவே இருந்தது ஆனால் இப்போது
சிறிய இடைஞ்சல்களை எல்லாம் கொண்டு வந்து நமக்கு அடிக்கடி
தொல்லை கொடுக்கின்றனர்.பிரச்சினை பெரியதாக இல்லை


என்றாலும் கொசு ஒரேடியாக கடித்து கொண்டிருந்தால் என்ன
செய்வது அதற்காக தான் இந்த சிறிய தொந்தரவுகளை எல்லாம்
மொத்தமாக சேர்த்து அத்தனைக்கும் தீர்வாக ஒரு டூல்
வெளிவந்துள்ளது. 7 குயிக் பிக்ஸ் என்பது தான் அதன் பெயர்.
விண்டோஸ் 7 -ல் ஏற்படும் இந்த சிறிய பிரச்சினைகள் 21-க்கும்
தீர்வாகவே இந்த டூல் வெளிவந்துள்ளது. இதை இந்த முகவரியில்
இருந்து தரவிரக்கி கொள்ளவும்.
முகவரி:
http://download.cnet.com/7-Quick-Fix/3000-2094_4-75024066.html
இந்த டூல் வெளிவந்த ஒரிரு நாளில் இரண்டு இலட்சம் பேர் இதை
தரவிரக்கியுள்ளனர். விண்டோஸ் 7 வைத்திருப்பவர்கள் தரவிரக்கி
வைத்துகொள்ளலாம் எப்போதாவது நமக்கு பயன்படும்..................

டிஎன்ஏ டெஸ்ட் பார்த்துட்டேன், நாமெல்லாம் ஒரே இனம்தான் - சாமி!


சென்னை: பால் தாக்கரே, ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே ஆகியோரின் முடியில் டிஎன்ஏவை டெஸ்ட் செய்து பார்த்து விட்டேன். அவர்களது டிஎன்ஏவும், சக இந்தியர்களின் டிஎன்ஏவும் ஒன்றாகவே உள்ளன. எனவே மராத்தியர்கள், பிற இந்தியர்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்று இனியும் தாக்கரேக்கள் கூறிக் கொண்டு திரியக் கூடாது என்று தடாலடியாக கூறியுள்ளார் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி.

எல்லோரும் ஒரு பக்கம் போனால் சாமி மட்டும் இன்னொரு பாதையில் போய்க் கொண்டிருப்பார். அந்த வகையில், தற்போது நாடு முழுவதும் பெரும் எரிச்சலை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தாக்கரேக்கள் விடும் சவுண்டுப் பிரச்சினையை புதிய கோணத்தில் அணுகியுள்ளார் சாமி.

அது என்ன என்பதை அவரது வாயாலேயே கேட்போம்...

பிற இந்தியர்களிடமிருந்து தாங்கள் மரபணு ரீதியாக (genetic make-up) வேறுபட்டவர்கள் என்பதை நிரூபிக்க பால் தாக்கரே முன்வர வேண்டும். அதை விடுத்து மராத்தியர்கள், மராத்திய தர்மம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கக் கூடாது.

தாக்கரே குடும்பத்தினரின் டி.என்.ஏவும், எனது டி.என்.ஏவும், உ.பியில் உள்ளோரின் டிஎன்ஏவும் ஒன்றுதான். அனைத்து இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியான மரபணுதான்.

இதை நான் வெறுமனே சொல்லவில்லை. தாக்கரேக்களுக்கு முடிவெட்டுவோரிடமிருந்து அவர்களது முடியை சேகரித்து ஹைதராபாத் ஜீன் க்ளீனிக்கில் சோதனை செய்து பார்த்தேன். அதில்தான் இந்த உண்மை தெரிய வந்தது.

எனவே வெறுமனே பேசிக் கொண்டிருக்கக் கூடாது தாக்கரேக்கள்.
மும்பை மராத்திகளுக்கே என்று சிவசேனா சொல்லிக் கொண்டிருப்பதைக் கண்டித்ததன் மூலம் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தான் ஒரு தேசப்பற்றுள்ள தலைவர் என்பதை நிரூபித்து விட்டார்.

அனைத்து இந்தியர்களும் பாரத அன்னையின் புதல்வர்கள், மதம், பிராந்தியம், மொழிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் இந்தியர்கள் என்பதை அவர் தெளிவாக கூறி விட்டார். இதைப் பாராட்டுகிறேன்.

உண்மையில் மராத்தி மொழியில் 70 சதவீத சமஸ்கிருத வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. எனவே பிற இந்திய மொழிகளைப் போலவே மராத்தியும் ஒரு இந்திய மொழிதான்.

தமிழில் கூட 44 சதவீத சமஸ்கிருத வார்த்தைகள் உள்ளன. மேலும், மராத்தி மொழியின் எழுத்து வடிவம் தேவநாகரியிலிருந்து எடுக்கப்பட்டது. தேவநாகரி, சமஸ்கிருத்தத்தின் ஒரு பகுதி.

எனவே மராத்தி, மராத்தி தர்மம் என்றெல்லாம் வாத்துப் பிடிக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பதை தாக்கரேக்கள் கைவிட வேண்டும். மாறாக, தீவிரவாதிகளுக்கு எதிராகவும், வெளிநாட்டு ஆதிக்க சக்திகளிடமிருந்தும் நாட்டை மீட்கும், காக்கும் முயற்சியில் அனைவருடனும் இணைந்து செயல்பட அவர்கள் முன்வர வேண்டும் என்றார் சாமி.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More