10 August 2010

மோட்டாரோலாவின் பட்ஜெட் போன்கள்

பல விலை மலிவான மொபைல் போன்கள் வருகையால், தன் மார்க்கட்டினை இழந்து வரும் நிலையில், மோட்டாரோலா நிறுவனம் மீண்டும் தன் இடத்தைப் பிடிக்க, ஐந்து, பட்ஜெட் தொடக்க நிலை மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. மோட்டாயுவா என்ற பெயரில் இவை வந்துள்ளன.

இவற்றின் விலை ரூ.1,490 முதல் ரூ. 2,890 வரை உள்ளன. இந்த மாடல்கள் WX181, WX260, WX265, WX290 மற்றும் WX295 என்ற எண்களுடன் கிடைக்கின்றன. இவற்றில் மிக மலிவானது WX181 ஆகும். இதன் விலை ரூ. 1,490. இதில் மெமரி ஸ்லாட் இல்லை. WX260 மாடலில் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் தரப்பட்டுள்ளது. 2ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

எப்.எம். ரேடியோ பிளேயர், வண்ணத்திரை உள்ளன. இரண்டு அலை வரிசையில் இயங்கும் இந்த மாடலில் ஜி.பி.ஆர்.எஸ் வசதியும் தரப்பட்டுள்ளது.WX265 மாடல் ஒரு பிளிப் போன் ஆகும். புளுடூத் இணைப்பு உள்ளது. இவற்றில் WX290 ஒரு அட்வான்ஸ்டு மாடல் போனாகும். மாடலில் விஜிஏ கேமரா ஒன்று தரப்பட்டு ள்ளது.

எப்.எம்.ரேடியோ மற்றும் இரண்டு டிஸ்பிளே இந்த போனின் சிறப்பாகும். வேகமாக வளர்ந்து வரும் இந்திய மொபைல் சந்தையில், ஒவ்வொரு நிறுவனமும் தன் பங்கினைக் குறையவிடாமல் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றன. அந்த வகையில் மோட்டாரோலாவின் இந்த மாடல்கள் இந்நிறுவனத்திற்குக் கை கொடுக்குமா என்று காணலாம்.

02 August 2010

கம்ப்யூட்டர் யுகத்தின் அடுத்த புரட்சி

உள்ளங்கையில் வைத்து பட்டனை செல்லமாக தட்டினால், கம்ப்யூட்டர் இயங்கத்துவங்கும்; நீங்களும் அதை இயக்கலாம். இன்டர்நெட் பார்க்கலாம். இ-மெயிலும் தரலாம்.என்னது இப்படி ஒரு அதிசயமா என்று வியக்கிறீர்களா?

ஆம்,கையடக்க… இல்லையில்லை; உள்ளங்கை அடக்க, மிகவும் சிறிய அளவில், “ஸ்டிக்கர்’ வடிவ கீ போர்டு வந்து விட்டது. இந்தப் புதிய கருவிக்கு, “ஸ்கின்புட்’ என்று பெயர். நம் காதால் கேட்க முடியாத மிகக் குறைந்த சத்தங்களைக் கண்டறியும் அடிப்படையில் இக்கருவி இயங்கும். நம் உள்ளங்கையில் இதை வைத்துக் கொண்டு, லேப்-டாப், கம்ப் யூட்டர், மொபைல், ஐபாட் ஆகியவற்றை இயக்க முடியும்.

மைக்ரோசிப் வடிவிலான புரஜக்டர்கள் தான் கீபோர்டு வடிவில் இருக்கும். அதில் உள்ள பட்டன் களை நீங்கள் தட்டினால் அதிலிருந்து எழும் சத்தத்தை வைத்து அதற்கான விளைவுகள் திரையில் உருவாகும்.முன்னங்கைகளில் எந்த இடத்தில் எந்த சிப் இருக்கிறதோ அந்த, “சிப்’பில் உள்ள பட்டனை மிகவும் செல்லமாக நீங்கள் தட்டினால் போதும்; என்ன எழுத்து வரவேண்டுமோ அதுவரும் வகையில், கைகளில் பல்வேறு கோணங் களில் பொருத்தப் பட்டுள்ள சென் சார்களிலிருந்து செய்தி கடத்தப்படும் வகையில் இந்தப் புதிய கருவி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கருவி, 20 வாடிக்கையாளர்களைக் கொண்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது சந்தைக்கு வரக்கூடும்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More