28 March 2010

எய்ட்ஸ் நோயை தடுக்கும் வாழைப்பழம்

வாழைப்பழத்தில் உள்ள ரசாயனம் மூலம் எய்ட்ஸ் நோய் வராமல் தடுக்கலாம் என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எய்ட்ஸ் நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. நோய் வரும் முன், தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காண்டம் பயன்படுத்தினால் எய்ட்ஸ் வராமல் தடுக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது, அமெரிக்க விஞ்ஞானிகள் இது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வில் புது தகவலை கண்டுபிடித்துள்ளனர்.

வாழைப்பழத்தில் உள்ள கெமிக்கல் மூலம் எய்ட்ஸ் வராமல் தடுக்கலாம் என்பது தான் அது.வாஷிங்டன் நகரில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். பொதுவாக தாவரங்களில் இருக்கும் ரசாயனம், நோய் தொற்றுகளை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை.

வாழைப்பழத்தில் இருக்கும் லேக்டின் என்ற ரசாயனம், எய்ட்ஸ் வராமல் தடுக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதை உறுதிப்படுத்தும் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

26 March 2010

சிப்பி



கடலுக்குள் ஓடுகள் பெற்றுள்ள உயிரினங்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றன. இவற்றில் ஒன்றுதான் முத்துசிப்பி. சிப்பிகளிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. 2.5 செ.மீ., முதல் ஒரு மீட்டர் வரை வளரக்கூடியவை. சிப்பிகளின் ஓடு இரு பகுதிகளானது. இரு பகுதிகளும் ஓரத்தில் ஓரிடத்தில் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் அதன் ஓடுகள் திறந்தே இருக்கும். நீரில் இருக்கும் ஆக்சிஜனை கிரகிக்கிறது சிப்பி. அதன் பருவ காலத்தில் கோடிக்கணக்கான முட்டைகளை இட்டுத் தள்ளும்.

முட்டையை விட்டு வெளியே வரும்போது சிப்பிக்கு ஓடு இருக்காது. அப்போது அதன் உருவம் ஒரு ஊசி முனை அளவே இருக்கும். ஒரு நாள் கழித்தே அதற்கு ஓடு உண்டாகிறது.
இரண்டு வாரங்களில் நீந்த தொடங்கும். ஐந்து ஆண்டுகளில் முழு வளர்ச்சி அடையும். மிக நல்ல முத்துக்கள் பாரசீக வளைகுடாவில் தான் கிடைக்கிறது. அரேபியர்கள் கடலில் மூழ்கி முத்து குளிப்பதையே முக்கிய தொழிலாக கொண்டிருக்கின்றனர். சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகிய நிறங்களிலும் முத்துக்கள் கிடைக்கின்றன.

22 March 2010

ஹைட்டி தீவில் மீண்டும் நிலநடுக்கம் : 3 பேர் பலி

ஹைதி தீவில் நேற்று முன்தினம் இரவு நில நடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் 3.7 ரிக்டர் அளவில் பதிவாகி இருந்தது. பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்பட வில்லை.இந்த நிலையில் நேற்றிரவு ஹைதி தீவின் வடக்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. சில வினாடிகளுக்கு இந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

இதில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து நொறுங்கின. தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இன்று காலை ஐ.நா. மீட்புக்குழு ஹைதியில் முகாமிட்டு மீட்புப்பணியை தீவிரப்படுத்தியது. ஒரு கட்டிடத்தை அகற்றிய போது, அதற்குள் 3 பேர் உடல் நசுங்கி செத்து கிடப்பது தெரிந்தது.

ஐ.நா.அமைதிக்குழுவை சேர்ந்த படையினரும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்களுக்கு உணவு, குடிநீர் கிடைப்பது பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா உள்பட பல நாடுகள் ஹைதிக்கு நிவாரணப்பொருட்களை அனுப்பி வருகின்றன.

19 March 2010

செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன?

பரம்பரைத் தன்மை, நெருங்கிய உறவினர்களிடையே திருமணம் செய்து கொள்ளுதல், ரத்தப் பிரிவு, கர்ப்ப காலத்தில் தொற்று நோய்கள் பாதிப்பது, கர்ப்பிணி பெண்கள் ஊட்டச்சத்து குன்றியிருப்பது, கர்ப்ப காலத்தில் சில மருந்துகளைச் சாப்பிடுதல், கர்ப்ப காலங்களில் அடிக்கடி நுண்கதிர் வீச்சு படம் எடுத்தல் ஆகியவை குழந்தைக்கு பிறவி செவித் திறன் குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்களாகும்.
குழந்தை பிறந்த பிறகு...: குறை மாதத்தில் பிறப்பது மற்றும் ஆயுதம் மூலம் பிறப்பது, குழந்தைக்கு பிறந்தவுடன் மூச்சுத் திணறல் ஏற்படுவது, குழந்தை பிறந்தவுடன் நீண்ட நேரம் அழாமல் இருப்பது, குழந்தையின் எடை 1,200 கிராமுக்கும் குறைவாக இருப்பது ஆகியவை காரணமாக செவித் திறன் குறைபாடு ஏற்படலாம்.

குழந்தை பிறந்தவுடன் மஞ்சள் காமாலை, அதிகமான காய்ச்சல் அல்லது வலிப்பு போன்றவை செவித் திறனைப் பாதிக்க வாய்ப்பு உண்டு. தொற்று நோய்கள், நீண்ட காலமாக ஆன்டிபயாட்டிக் மருந்துகள் சாப்பிடுதல், காதில் அடிபடுதல், தொடர்ந்து அதிக சத்தமான சூழ்நிலையில் இருத்தல், உயர் ரத்த அழுத்த நோய், கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோய், காது நரம்பில் கட்டி இருத்தல், காதில் நீர் வடிதலை அலட்சியம் செய்தல், முதுமை ஆகியவை காரணமாக செவித் திறன் குறைபாடு ஏற்படலாம்.

காது கேட்கும் திறன் குறைபாடு ஏற்படுத்தும் பல காரணங்களை எல்லா சமயங்களிலும் கட்டுப்படுத்த முடியாது.

எனினும் காரணத்தை காலதாமதமின்றி அறிந்து கொள்வதன் மூலம் முன்னெச்சரிக்கையாக தடுக்கும் முறைகளைக் கண்டறிந்து செயல்படுவது நல்லது

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More