20 January 2010

இந்தியா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அறிவுறுத்துகிறதா? அச்சுறுத்துகிறதா?


இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்கள், சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலில் தமது நிலைப்பாட்டினைத் தெரிவித்திருந்தனர். அப்போது இந்திய தரப்பின் சார்பில், இச் சந்திப்பில் கலந்து கொண்டவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பிரசாரங்களை மேற்கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்பட்டதாக, கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவில் தேர்தல் மூலம் அரசியல் மாற்றங்கள் நிகழும் பட்சத்தில், வன்னியில் நடைபெற்ற இறுதியுத்தத்தில், இந்தியாவின் பங்கு குறித்த கேள்விகள் எழுந்துவிடக் கூடாது என்பதில் இந்திய தரப்பு மிகுந்த அவதானமாகச் செயற்படுவதாகத் தெரிய வருகிறது.

தற்போது சரத் பொன்சேகாவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்கும் முடிவை எடுத்திருப்பதும், ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகா வெற்றிபெறும் சாத்தியங்கள் உள்ளதாக கணிப்புக்கள் தெரிவிக்கும் நிலையும், இந்திய தரப்பை பரபரப்பாக்கியுள்ளதாகவே அறிய முடிகிறது.

இதன் காரணமாகவே சந்திப்பினை மேற்கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரிடம், தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளும்போது இந்திய மத்திய, தமிழக அரசுகளுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் விதமான பரப்புரைகளைத் தமிழ் கூட்டமைப்பு வெளியிடக்கூடாது என்ற கண்டிப்பான அறிவுறுத்தலை, உத்தரவாகவே இந்தியதரப்பு வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே போன்று எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகா அறிவிக்கபடுவது உறுதியான போது, சரத் பொன்சேகாவும், எதிர்கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்கவும், இந்தியாவிற்கு அழைத்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More