19 January 2010

கம்ப்யூட்டரில் வைரசை அனுப்பி பாதுகாப்பு ரகசியங்களை அழிக்க சீனா முயற்சி: எம்.கே.நாராயணன் புகார் New Delhi செவ்வாய்க்கிழமை, ஜனவரி 19, 11:19 AM IST மதிப்பீடு இல்லை

இமெயில்பிரதிவலைப்பூக்கள் digg del.icio.us newsVine
புதுடெல்லி, ஜன. 19-

தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், மேற்கு வங்க புதிய கவர்னராக நியமிக்கப்பட்டு இருப்பவருமான எம்.கே.நாராயணன் இங்கிலாந்து பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

இந்திய பாதுகாப்பு சம்பந்தமான ரகசியங்களை திருடவும், அவற்றை அழிக்கவும் சீனா பலமுறை முயற்சித்து வருகிறது. பாதுகாப்பு ஆலோசகத்தில் உள்ள கம்ப்யூட்டர்களுக்கு வைரஸ்களை அனுப்பி இந்த முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.

சமீபத்தில் பாதுகாப்பு ஆலோசனை அலுவலக கம்ப்யூட்டருக்கு ஒரு இ.மெயில் வந்தது. பி.டி.எப். கோப்புடன் “திரோசன்” என்ற வைரசை இணைத்து இந்த இ.மெயிலை அனுப்பி இருந்தனர். இதை கண்டுபிடித்து வைரசை அழித்துவிட்டோம்.

இந்த வைரஸ் மூலம் சீனாவில் இருந்தபடியே இங்குள்ள தகவல்களை டவுன்லோடு செய்து விட முடியும். மேலும் தகவல்களையும் முற்றிலும் அழித்துவிட முடியும். உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் சீனா முயற்சி பலிக்கவில்லை.

சீனாவின் இந்த முயற்சி முதன் முறை அல்ல. பலமுறை இப்படி செய்து இருக்கிறார்கள்.
கம்ப்யூட்டரில் வைரசை அனுப்பி பாதுகாப்பு ரகசியங்களை அழிக்க சீனா முயற்சி

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More