20 January 2010

Up In The Air (2009) [Best of 2009 -03]

அடுத்தவர்களிடன்... “ஸாரி.. உங்களுக்கு இன்னையோட வேலை போய்டுச்சி” என சொல்வதே ஒருவனின் முழு நேர வேலையாக இருந்தால் எப்படியிருக்கும்? Up In The Air-ல் ஜார்ஜ் க்ளூனியின் 365 நாள் வேலையும் அதுமட்டும் தான்!!


கார்பொரேட் டவுன்சைஸர்ஸ் : இந்த வேலை இந்தியாவில் பிரபலமான்னு தெரியலை. இந்த நாட்டில் சக்கை போடு போடுதாம். இந்த மாதிரி கம்பெனிகளின் வேலை, பெரிய - நடுத்தர - சிறிய கம்பெனி என எந்த பாகுபாடும் பார்க்காமல்..., அதன் மேனேஜ்மெண்டிடம் பேசி.....

தோ.. பாரு...! இவன் வெட்டியா... ஆஃபீஸில் உட்கார்ந்து கிட்டு ப்லாக் எழுதிகிட்டு இருக்கான். இவனை வீட்டுக்கு அனுப்பு. இன்னொருத்தன் வெட்டியா ட்வீட்டுறான். அவனையும் அனுப்பு. இப்ப உன் கம்பெனிக்கு நான் வருசம் இத்தனை டாலர் சேமிச்சி கொடுத்திருக்கேன். இதனால இவ்வளவு டாக்ஸ் பெனிஃபிட் வேற அரசாங்கத்திடம் இருந்து கிடைக்குது. என் பங்கு இத்தனை பர்சண்டை கொடு

-என பேசியே...., ஒரே கம்பெனியில்... ஆண்டுக் கணக்காக உட்கார்ந்த இடத்தை தேய்த்தவர்களை, சொல்லாமல் கொல்லாமல் வேலையை விட்டு அனுப்புவார்கள். இதில் இன்னொரு கேட்டகிரி..., அந்த ஆஃபீஸில் வேறு எதோ வேலையில் உட்கார்ந்து கொண்டு, நன்றாக வேலை பார்க்கும் ஆட்களை, அடுத்தக் கம்பெனிக்கு... விலைக்கு விற்பார்கள். ஒரு 20-30 பேரை, ஃப்ளைட்டின் முதல் வகுப்பில்... அமெரிக்கா முழுக்க.. 300 நாட்களுக்கு அனுப்ப வேண்டுமென்றால்... இது எத்தனை பணம் புழங்கும் தொழிலாக இருக்கும்?

பார்ப்பதற்கு பராக்கு மாதிரியிருக்கலாம். ஆனால்.. இவர்களின் சம்பாத்தியம் யோசிக்க முடியாதது. இப்படியெல்லாம் ஒரு வேலையிருக்குன்னே நமக்குத் தெரியாத போது, இவர்கள் சம்பாதிக்கும் காசைப் பற்றி எப்படித் தெரியும்!

Up In The Air, இதே பெயரில் வெளிவந்த ஒரு நாவலைத் தழுவி எடுக்கப் பட்ட, ஒரு ரொமாண்டிக் + மேனேஜ்மெண்ட் கவிதை.


ராய்ன் (க்ளூனி), இது போன்றதொரு கம்பெனியில்... தனக்குச் சம்பந்தமில்லாத இன்னொரு கம்பெனியில் வேலை செய்யும்... ‘யாரென்றே தெரியாத’ ஆட்களை எல்லாம் ‘ஃபயர்’ செய்வது மட்டுமே முழு நேரத் தொழில். இந்த வேலையால்.. 300 நாட்களுக்கும் மேல் விமானத்திலேயே இருப்பவர். ஒருவரின் வேலை காலி என்று சொல்லும் போது, அதை எவ்வாறு சொல்ல வேண்டும் என்ற அனுபவம் அதிகம். கல்யாணம் ஆகாத + பிடிக்காத, உறவு முறைகளில் விருப்பமில்லாத, நாற்பது சம்திங் பிரம்மச்சாரி.

இந்த பயணங்களில், இதே போல அடிக்கடி பயணிக்கும், உறவு முறைகள் பிடிக்காத, அலெக்ஸ் என்ற நடுத்தர வயது பெண்ணை, ஏர்போர்ட்டில் சந்தித்ததும்... காதல் என்றெல்லாம் ஃபிலிம் காட்டாமல், கட்டிலில் மட்டும் ஃபிலிம் காட்டுகிறார்கள் (ஒரே சீன் மட்டும்தான். அதுவும் அரைகுறை).

‘வேலை போய்விட்டது’ என்ற வேலை செய்பவருக்கே... ‘வேலை போய்விடும்’ அபாயம் வருகிறது. அவர் கம்பெனிக்கு புதிதாக வரும் நேடலி என்ற இளம் பெண், வெப் கான்ஃபரன்ஸ் மூலமாக அமெரிக்காவின் எந்த மூலையில் இருப்பவரையும் எந்த செலவும் இல்லாமல், ‘டாட்டா’ சொல்ல முடியும் என்ற ஐடியாவை கொடுக்க.......

இந்த இருவருக்கும்... யாருடைய முறை சரியானது என்று, கம்பெனிக்கு காட்ட வேண்டிய கட்டாயாம். இதற்காக இருவரும் ஒன்றாக பயணிக்கிறார்கள். வேலை போய்விட்டது என்று சொல்லும் போது..., எதிராளியிடம் ஏற்படும் உணர்ச்சி குவியலுக்கு, இணையம் நல்லதா, நேரடி ஆறுதல் + ஆப்ஷன் நல்லதா.. என கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்கிறார்கள். அதற்காக நேடலி கொடுக்கும் விலை...மிகப் பெரிது.

இந்தப் பயணத்தில் இடையில்.. அலெக்ஸும் சேர்ந்து கொள்ள, இந்த மூவருக்குள்ளும் பல்வேறு மாற்றங்கள். அந்த மாற்றத்தில்.. ராய்ன் கொடுக்கும் விலை இன்னும் பெரியது.

இதையெல்லாம் பார்க்க.... உங்களுக்குத் தேவை, இரண்டு மணி நேரமும் கொஞ்சம் பொறுமையும். முடிந்திருக்கும் போது...., எத்தனை சோகமாக சொல்ல வேண்டிய காட்சிகளை, இத்தனை உற்சாகமாகவும், உணர்ச்சிகரமாகவும் சொன்ன ஜேஸன் ரெய்ட்மேனுக்கு கை தட்டிக் கொண்டிருப்பீர்கள்.


இந்த வருட ஆஸ்கரில், ஐந்தில் ஒரு இடம் க்ளூனிக்கு உறுதி. இன்னும் மனுசனுக்கு அதே செக்ஸி சிரிப்பு. நடுத்தர வயதின் நரையில்... அழகும், கம்பீரமும் இன்னும் கூடுமாமே (அப்படியாஉண்மைத் தமிழன்?). எலிஸபெட்டா கிட்ட சொல்லி சுத்திப் போடணும். கோல்டன் க்லோபிற்கு ஏற்கனவே நாமினேட் ஆனதுமில்லாம... வரிசையா.. விருதுகளை அள்ளி குவிச்சிருக்கார். வேற எதுவும் சொல்லுறதா இல்லை. நீங்களே பார்த்துட்டு சொல்லுங்க.

வெரா ஃபார்மிகா : இது பொம்பளை க்ளூனிங்க. படம் பார்த்து முடிக்கிற வரைக்கும்.. எங்கயோ பார்த்திருக்கோமே-ன்னே நினைச்சிட்டு இருந்தா... Orphan -ல அம்மா கேரக்டர். அப்புறம் The Boy in the Striped Pajamas படத்திலும் கூட!! எனக்கும் அழகும், கம்பீரமும் வந்துகிட்டே இருக்கா....! இப்பல்லாம் மறந்துடுறேன்.

நேடலியா வர்ற ஆனா கெண்ட்ரிக். இந்த மூணு பேர் மட்டும்தான் 90% படத்தில். யாராவது ஒருத்தர் லூசில் விட்டாலும்.. இன்னொருத்தர் ஸ்க்ரீனை கண்ட்ரோலுக்கு எடுத்துக்குவாங்க போல. நம்மூரு ஹீரோயின்களுக்கு..... ஜூஸ் குடிச்ச பின்னாடி கொஞ்சம் டைம் இருந்தா.. இந்தப் படத்தை போட்டு காட்டணுங்க. நாண்டுக்குவாங்க!!!

ஜூனோ-ங்கற மிகப் பெரிய ஹிட் படத்தை கொடுத்துட்டு (பட்ஜெட் : 6, வசூல் : 230), கிட்டத்தட்ட மூணு வருடமாக காணமல் போன ஜேஸன்... பேக் வித் பேங்....!!! என்னை விட நாலு மாசம் சின்னப் பையன். மிக மிக அருமையான படங்களா இயக்கிட்டு இருக்காரு. நமக்கு.. அதை எழுதக் கூட சரியா வர மாட்டேங்குது.

ஆனால்.. எவ்வளவு பெரிய நடிகர்கள் நடித்தாலும், நல்லப் படங்கள் என்றால் காசு பார்க்க முடியாது என்ற உலக விதியை பின்பற்றி... ரொம்ப நாட்களாக.. தடுமாறி..., லிமிடட் ரிலீஸாக இருந்து... நோட்டம் பார்த்தப் பின், ரெண்டு, மூணு வாரம் முன்பு.. ‘வைட் ரிலீஸ்’ ஆக்கினார்கள். இருபத்தைந்து மில்லியனுக்கு, அறுபது மில்லியன் ரிடர்ன்.

படம் பார்த்து முடிச்சவுடன்... எதோ... மனசை பிசையற மாதிரி ஒரு ஃபீலீங் வருமே... அதுக்கு மீ த கேரண்டி.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More